பனி முட்டைகளாய்
முற்றத்தில் வீழ்ந்தபோது
வினைப் பின்னமில்லா
விடலைப் பருவத்திலே
முத்துக்களாய் சேகரித்தேன்!
சன்னலில் சாறலாய்
முத்தங்கள் பதித்தபோது
உடைந்த துளிகள்
உலர் உள்ளத்தை
நனைத்தது உணர்ச்சியால்!
தோட்டத்தில் தூறலாய்
பூவிதழில் பொதிந்தபோது
தழுவாத தருணங்கள்
எண்ணிய தவிப்புகளெத்தனை!
சாப்ளின் சொன்னதுபோல்
உன்னோடு உறவாடும்போது
உப்புநீர் உமிழும்
என்றும் என் கண்ணோடு!
கவிதை அருமை. எளிமையான சொற்கள். மழை அனுபவிக்க வேண்டிய ஒன்று. கவிதை சொல்லும் செய்தியினைப் புரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் கவிதை ஆசிரியரைப் பற்றிய புரிதல் வேண்டும் என நினைக்கிறேன்.
ReplyDeleteசீனா ஐயா,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!