Thursday, December 27, 2007

என் குட்டிதேவதை


சொருகிய கண்களோடு

கருகிப்போன தன் சிறகுகளை

குப்பையில் தேடிக்கிடந்தாள்

என் குட்டிதேவதை!

பட்டினியிலொட்டிய ஓநாய்

வயிற்றுடனிருந்த அவளின்

வெளுத்த முகத்தின்

கண்ணீர்க் கோடுகளை

ஈக்கள் மொய்த்திருந்தன!

இதையெல்லாம் பார்த்தும்

பாராமல் செல்லும் நீ!

பூந்தளிர்மொட்டை மேயும்

புழுவாகப் போகக்கடவது!

Monday, December 24, 2007

மழையோடு உறவாடுபனி முட்டைகளாய்

முற்றத்தில் வீழ்ந்தபோது

வினைப் பின்னமில்லா

விடலைப் பருவத்திலே

முத்துக்களாய் சேகரித்தேன்!

சன்னலில் சாறலாய்

முத்தங்கள் பதித்தபோது

உடைந்த துளிகள்

உலர் உள்ளத்தை

நனைத்தது உணர்ச்சியால்!

தோட்டத்தில் தூறலாய்

பூவிதழில் பொதிந்தபோது

தழுவாத தருணங்கள்

எண்ணிய தவிப்புகளெத்தனை!

சாப்ளின் சொன்னதுபோல்

உன்னோடு உறவாடும்போது

உப்புநீர் உமிழும்

என்றும் என் கண்ணோடு!

Saturday, December 22, 2007

கலையட்டும் மௌனம்கடந்தகால சப்தங்களுக்கு

அர்த்தங்கள் கற்பித்து

துணையிழந்த தனிமையில்

வெறுமை காணாதே!

நீ செல்லும் பாதையில்

மலர்கள் எத்தனையோ!

பூப்பவை ஒருநாள்

உதிரும் இது நியதி!

முடிந்த கதைக்கு முன்னுரை

எழுதவில்லை நான்

முடியாத உன் துன்பங்களுக்கு

முற்றுப்புள்ளியாய் நான்!

தொலைட்டும் இறுக்கம்

கலையட்டும் மௌனம்!

பூக்களில் உறங்கும் மௌனங்கள்


மரத்தின் விரலில்

செடியின் மடியில்

மலர்ந்த உங்கள்

மௌனங்களே மொழி

வார்த்தைக்கு வஞ்சனை!

அழகின் அமைதி

கைம்பெண் புன்னகை!

மலர்ச்சியின் ஒலி

கனவின் ஊமைத்தனம்!

மாலையில் தூக்கிலிட்டு

மரணத்தில் மடிந்து

இதழை இழந்து

இறப்பிலும் நிசப்தம்!

வெற்றிடத்தில் விஞ்சியது

மௌனம் மட்டுமல்ல

சிலநிமிட மணமும்தான்

முடிவில் நீயும் ஒரு

அழகியல் வெறுமை!!

('நச்' கவிதைப் போட்டிக்கு இதனை சமர்ப்பித்து, போட்டியில் பங்கெடுத்த பெருமையாவது கொள்கிறேன்!!)

Wednesday, December 19, 2007

அழகின் மிருகம்


இசையை யேற்காமல்

மனக்கோப்பை கவிழ்த்துவிட்டு

மலரப்போகும் மொட்டுக்களை

கடித்துத் துப்பியபடி

சுற்றித்திரிந்த என் மிருகம்!

அவள் கண்ணீரின் கதகதப்பில்

அரவணைப்பின் உறைவிடத்தில்

சற்றுநேரம் உறங்கிப்போனது!

லதாமங்கேஷ்கர் பாடலுக்கு ஹெலனின் நடனம்!

1960-களில் ஜேம்ஸ்பாண்ட் படதாக்கங்களால் திரையுலகை அதிகம் ஆக்கிரமித்து இருந்த மேற்கத்திய பாணி களியாட்ட நடனங்களின் ரசிகர்கள் வெகு அதிகம். ஹிந்திதிரப்படவுலகில் ஹெலன் இத்தகைய நடனத்திற்கு மிகவும் புகழப்பட்டவர். லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால் இசையில், 1968-ல் வெளிவந்த "Intquam" என்ற திரைப்படத்திற்காக லதா மங்கேஷ்கர் பாடிய பாடல். விடுதியின் கேப்ரெட் களியாட்டப் பாடலுக்கு ஹெலன் ஆடியிருக்கிறார். உங்கள் ரசனைக்காக இதோ அப்பாடல்....!!

ClickComments