மரத்தின் விரலில்
செடியின் மடியில்
மலர்ந்த உங்கள்
மௌனங்களே மொழி
வார்த்தைக்கு வஞ்சனை!
அழகின் அமைதி
கைம்பெண் புன்னகை!
மலர்ச்சியின் ஒலி
கனவின் ஊமைத்தனம்!
மாலையில் தூக்கிலிட்டு
மரணத்தில் மடிந்து
இதழை இழந்து
இறப்பிலும் நிசப்தம்!
வெற்றிடத்தில் விஞ்சியது
மௌனம் மட்டுமல்ல
சிலநிமிட மணமும்தான்
முடிவில் நீயும் ஒரு
அழகியல் வெறுமை!!
('நச்' கவிதைப் போட்டிக்கு இதனை சமர்ப்பித்து, போட்டியில் பங்கெடுத்த பெருமையாவது கொள்கிறேன்!!)
புரியாத மாதிரி கவிதை எழுதுற அளவுக்கு பெரிய ஆளா நீங்க :)
ReplyDeleteஅப்புறமா திரும்பவும் படிக்கிறேன்.
ஐயோ என்ன இப்படி சொல்லிட்டிங்க!! அப்ப புரியர மாதிரி வேறஒன்னு எழுதவா? :))
ReplyDeleteயவனத்தச்சன் - தலைப்பு - புரியவில்லை - இருப்பினும் கவிதை புரிகிறது.
ReplyDelete//வார்த்தைக்கு வஞ்சனை
அழகின் அமைதி
கைம்பெண் புன்னகை
கனவின் ஊமைத்தனம்
வெற்றிடத்தில் விஞ்சியது
மெளனம் மட்டுமல்ல
மணம் கூடத்தான்//
அருமை அருமை
சீனா ஐயா,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!
கவிதாயினிக்கு போட்டியே இல்லைன்னு நினைச்சேன்...
ReplyDeleteவந்துட்டாய்யா..வந்துட்டான்
போட்டிக்கு வாழ்த்துக்கள் ராசா ;)
கோபி,
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!
குட்டிபிசாசு,
ReplyDeleteஉங்கள் கவிதையைப் படிக்கும்
போது வெறுமையின் உச்சக்கட்ட கொடுமையை உணரமுடிகிறது.
கவிதை அருமை