
சொருகிய கண்களோடு
கருகிப்போன தன் சிறகுகளை
குப்பையில் தேடிக்கிடந்தாள்
என் குட்டிதேவதை!
பட்டினியிலொட்டிய ஓநாய்
வயிற்றுடனிருந்த அவளின்
வெளுத்த முகத்தின்
கண்ணீர்க் கோடுகளை
ஈக்கள் மொய்த்திருந்தன!
இதையெல்லாம் பார்த்தும்
பாராமல் செல்லும் நீ!
பூந்தளிர்மொட்டை மேயும்
புழுவாகப் போகக்கடவது!