
உதித்த துளி மாதங்களில்
உறங்கிப்போன சோகம்
அடைக்கிறது காற்றை
ஏன் இப்படி? எனக்கு மட்டும்!
புதைக்கப்போன காட்டில்
சவக்கற்கள் காட்டியது
ஆயிரம் அற்பாயுள்களை!
விதிப்பயனை வியந்தவாறு
விதைநிலத்தை முத்தமிட்டு
மனவரி(லி)களைப் பொறித்தேன்!
"சருகுகளே! சத்தம் போடாதீர்கள்!
பிஞ்சிலே துஞ்சிய என் காதல்
இங்கு கண்மூடி உறங்குகிறது"!
NICE
ReplyDeleteசோகம். நண்பர் நர்சிம் இது போன்ற துக்கத்தை அனுபவித்திருக்கிறார்.
ReplyDeleteஅனுஜன்யா