
நீ...
ஊரெல்லாம் தேன்தேடி
உச்சாணியில் கூடுகட்டும்
ஓர் உழைக்கும் வர்க்கத்தை
உறிந்து குடிக்கும் சுரண்டல்வாதி!
ஆயிரம் அறைமேலே
ஆயிரமாயிரமாய் அமர்ந்த
கூட்டுக்குடித்தனத்தை
அடித்து அகதியாக்கிய இனவாதி!
மொந்தை நிறைய
தேன் இருந்தாலும்
நக்கிக் குடிக்கும் நாய்!
சுதந்திர சுரணையற்ற
உன்னால் சூறையாடப்பட்டு
சூன்யமாகிப் போனவை
சும்மாயிருக்க ஈக்களல்ல
தேனீக்கள்!!