பாரதியின் கம்பீரம் அவரின் கண்களில் உண்டு. மீசையில் உண்டு. குரலில் உண்டு. வார்த்தைகளில் உண்டு. ஆனால் பாரதி பல பேருக்கு கொடுத்த தன்னம்பிக்கையை அவர் சொன்ன ஒரேயரு கருத்து முடக்கி போட்டதை அந்த விழாவில் கேட்க முடிந்தது.
நான் எழுதிய பாடல்களை எப்படி எடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்பதே இல்லை. காரணம் அவ்வளவு பயமாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான பாடல்களை நான் எழுதினாலும், படமாக்கியதில் எனக்கு பிடித்தது சில பாடல்கள்தான் என்று நான்கே நான்கு பாடல்களை பட்டியலிட்டார் அவர். அப்படியென்றால் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு உருவம் கொடுத்த இயக்குனர்களின் திறமை, வெறும் வெற்று பிம்பங்கள்தானா? ஒரு பாடலை நினைக்கிற நேரத்தில், நினைக்கிற இடத்தில் எழுதிவிட முடியாது. அது ஒரு பிரசவம் என்பதை பலமுறை பதிவு செய்திருக்கிறார் இவர். புல்வெளிகளையும், பூங்காவனத்தையும் தேடிப்போயிருக்கிறார் பாடல்களை எழுத! சிந்திப்பதற்கே இத்தனை விஷயங்கள் தேவைப்படும்போது அதை படமாக்க எத்தனை விஷயங்கள் தேவைப்படும்? அதற்கு தேவையான வசதிகள் அந்த இயக்குனர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டதா? அப்படி செய்து கொடுத்த பின் தான் அவை மோசமாக எடுக்கப்பட்டதா? இதையெல்லாம் ஆய்வு செய்யாமல் பொத்தாம் பொதுவாக இயக்குனர்களை குறை சொல்வது நேற்று வந்த கவிஞர்களுக்கு வசதியாக இருக்கலாம். ஆனால்,
கவிப்பேரரசுக்கு அழகல்ல...!
நன்றி: தமிழ்சினிமா.காம்